நீங்கள் ஒரு புதிய பெற்றோரா?
உங்கள் பிறந்த குழந்தையை எப்படி கவனிப்பதென்று மலைப்பாக உள்ளதா?
உங்க வீட்டு பெரியவங்க அருகில் இல்லையா?
நிறைய பேர் அட்வைஸ் செஞ்சு, எதை ஃபாலோ பண்றதுன்னு குழப்பமா ?
திட உணவுகள் எனப்படும் ஸாலிட்ஃபுட் எப்படி ஆரம்பிப்பது என பதட்டமா?
சிறு பிள்ளைகளுக்கு என்ன சாப்பிட கொடுப்பது என்று யோசனையா?
குழந்தைக்கு போதுமான போஷாக்கு கிடைச்சுதா இல்லாயன்னு எப்படி தெரிஞ்சுக்குறது?
டென்ஷன விடுங்க!!!
நீங்க சரியான இடத்துக்குத்தான் வந்துருக்கீங்க !!!
நான் டாக்டர் ஹேமா அல்லது டாக்டர் மம்மீ.இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை.என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலை தளத்தை ஆரம்பித்துள்ளேன்.
பல தாய் மார்கள் யாரிடம் கேட்பது என்று தவிக்கிறார்கள்?
குழந்தைக்கு எதை ஊட்டுவது ,எப்படி பாராமரிப்பது என்று நிறைய பேர் என்னிடம் சந்தேகம் கேட்பாங்க.இளம் தாய் மார்களுக்கு அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதர்க்காகவே இந்த வலை தளத் தினுடே உதவ முடிவு செய்தேன்.
உங்களுடைய கையைப் பிடிச்சு குழந்தை வளர்ப்பில் கூடவே பயணம் செய்யப் போறேன்.பிள்ளைகளை எப்படி வளர்க்கணும் என்பதில் ஆரம்பித்து அவர்கள் வாந்தி எடுத்தாலோ அல்லது பேதி ஆனாலோ,பயமில்லாமல் என்னென்ன செய்யணும்,எப்படி செய்யணும் என்பது வரை நான் உங்களுக்கு வழி காட்டுவேன்.
திட உணவுகள் எப்படி கொடுப்பது,என்ன கொடுக்கலாம்,எந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம்,தாய்ப்பாலின் அருமை,தடுப்பூசி பற்றியும்,எளிய வீட்டு வைத்திய முறைகள் – இவை அனைத்தும் இங்கே காணலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்காக சரியான தேர்வுகளை நம்பிக்கையுடன் எடுத்தால் நம் வாழ்வே எளிதாகும். நிறைய பிரச்சினைகளுக்கு முடிவு காண்பீர்கள்.
இனிமே பாப்பா சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தால் கவலையோ அல்லது வம்பு பண்ணும் குழந்தையை எப்படி சமாளிக்க போறோம்னு பயமோ தேவை இல்லை.
ஹெலோ நான் டாக்டர் ஹேமப்ரியா,மொதல்ல நீங்க என்னை பத்தி ஒண்ணு தெருஞ்சுக்கணும்.
நான் குழந்தை வளர்ப்பில் வல்லுநரோ அல்லது நிபுணரோ இல்லை. உங்களைப் போல் நானும் ஒரு சராசரியான தாய். குழந்தை வளர்ப்பு என்பது சாகசம் நிறைந்தது. நான் ஒரு டாக்டரா இருந்தும் கூட பல நேரத்தில் பதட்டமா இருக்கும்,நாம செய்றது சரியா,குழந்தைக்கு இது நல்லதா என்று. நீங்கள் என்னென்ன குழப்பம் அடைந்தீர்களோ நானும் அதையெல்லாம் அனுபவித்திருக்கிறேன்.
நான் நிறைய விஷயங்கள் முயற்சித்துப் பார்த்து என் குழந்தைகளுடன் அனுபவித்து கற்றுள்ளேன் .மருத்துவ பின்னணி இருந்ததால்,ஒரு சிக்கலுக்கு என்ன தீர்வு,அதனுடைய காரணம், அதை எப்படி அணுக வேண்டும் என்பது எல்லாமே புரிந்தது.
என் அனுபவத்தில் உணர்ந்தவைகளை இங்கு மற்ற இளம் தாய்மார்களுடன் பகிர்கிறேன்.
பால் மறக்க மற்றும் திட உணவுகள்,டாய்லெட் பயிற்சி,நடக்கும் பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய தேவைகள்,உணவு அட்டவனைகள் பற்றியெல்லாம் விரிவாக பெற்றோர்களுக்கு எளிய முறையில் புரியும் விதமாக விளக்கி உள்ளேன்.
நீங்கள் எங்கள் இலவச செய்தி மடலுக்கு உங்கள் ஈ மெயில் ஐடீ கொடுத்து பதிவு செய்யலாம்.
பின் வரும் ஃபார்ம் நிரப்பினால் ,நான் உங்களுக்கு ஈ மெயில் மூலம் குழந்தை வளர்க்கும் கலை மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும் அனுப்பி வைப்பேன்.
இது முற்றிலும் இலவசமே…
link for Newsletter subscription…..
தங்களது குழந்தைகளுக்கு சத்துமாவு மற்றும் பிற இன்ஸ்டன்ட் ஹெல்த் மிக்ஸ் களை தயாரிப்பதற்கு நிறைய பேருக்கு நேரமிருப்பது இல்லை . அதனால் தோன்றிய ஐடியா தான், எங்கள் வீட்டிலேயே குழந்தைகளுக்கான கஞ்சிப் பொடிகளை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது.
சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் நாங்களே வீட்டில் தயாரித்து லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் என்ற பிராண்டில் விற்பனை செய்கிறோம்.
இந்த ஆரோக்கியமான குழந்தை உணவு பொருட்களில் எந்தவொரு ப்ரிஸர்வேடிவ்ஸ்,ஃப்ளே வரிங்,சுவை கூட்டிகளோ,கிடையாது. இவை எல்லாம் 100% இயற்க்கை உணவே!!!
உங்கள் குழந்தைகளுக்கு இது முற்றிலும் பாதுகாப்பான உணவே!!!
மக்களால் அதிகம் விரும்பப்பட்ட சில வலை பதிவுகள் இதோ….
• சளி,இருமலுக்கு 20 வீட்டுவைத்திய முறைகள்
• சத்து மாவு வீட்டிலேயே செய்வது எப்படி?
• குழந்தை உணவு அட்டவணைகள்
• சிறு குழந்தைகளுக்கான 50 முதல் உணவுகள்
உங்கள் கேள்விக்கு எங்களை அணுகவும்…ஈ மெயில் – info(dot)mylittlemoppet(dot)com