Go Back

குழந்தைகளுக்கான மூன்று வகையான அத்திப்பழம் ரெசிபிகள்

குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய வித்தியாசமான மூன்று வகையான அத்திபழம் ரெசிபிகள்.

Notes

1.குழந்தைகளுக்கான அத்திப்பழம் தண்ணீர்
தேவையானவை
  • உலர்ந்த அத்திப்பழம்
 செய்முறை
  1. அத்திப்பழத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மறுநாள் தண்ணீரை தனியாக வடிகட்டவும்.
  3. இந்த தண்ணீரை ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
2.பிரஷ் அத்திபழம் மசியல்
தேவையானவை
  • அத்திப்பழங்கள்
செய்முறை
  1. அத்திப்பழத்தின் நுனிப்பகுதிகளை நறுக்கி பாதியாக வெட்டிக் கொள்ளவும்.
  2. சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.
  3. பழத்தினை நன்றாக மசிக்கவும்.
  4. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்,தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.
3.உலர் அத்திபழம் மசியல்
தேவையானவை
  • உலர் அத்திப்பழங்கள்
செய்முறை
  1. பழத்தினை 3 முதல் 4 மணி நேரத்துக்கு தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸி ஜாரில் அதனை நன்றாக அரைத்து எடுக்கவும்.
  3. பரிமாறவும்.