Go Back

குழந்தைகளுக்கான பன்னீர் பெப்பர் கிரேவி

குழந்தைகள்சுவைத்து சாப்பிட கூடிய ஆரோக்கியமான ஹெல்தியான பன்னீர் கறி.

Ingredients

  • 150 கிராம் பன்னீர்
  • ½ கப் பால்
  • 1 டே.ஸ்பூன் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 வெங்காயம்
  • ¼ கப் முந்திரிப் பருப்பு
  • 2 பல் பூண்டு
  • ½ இன்ச் இஞ்சி
  • 2 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
  • ¼ டீ.ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீ.ஸ்பூன் சீரகம்
  • 1 டீ.ஸ்பூன் கரம் மசாலா

Notes

செய்முறை
  1. முந்திரிப்பருப்பை சூடான தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த முந்திரி பருப்புடன்,வெங்காயம்,பூண்டு இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  4. சீரகத்தினை போட்டு பொரியவிடவும் .
  5. அதனுடன் அரைத்து வைத்த முந்திரி விழுது சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
  6. பச்சை வாசனை போகும் அளவிற்கு 5 நிமிடங்களுக்கு தொடர்ந்து கிளறவும்.
  7. மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து 30 வினாடிகளுக்கு வதக்கவும்.
  8. தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  9. பன்னீர் சேர்க்கவும்.
  10. பால் மற்றும் கரம் மசாலா பவுடர் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  11. சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறலாம்.