Go Back

மொறு மொறு வெஜிடபிள் நக்கெட்ஸ்

Vegetable Nuggets in Tamil: குழந்தைகளுக்கான  டேஸ்டியான ஆரோக்கியமான மொறு மொறு வெஜிடபிள் நக்கெட்ஸ்.

Ingredients

  • 1 ½ கப் முட்டைக்கோஸ் நறுக்கியது
  • 1 கப் கேரட் நறுக்கியது
  • 1 கப் பீன்ஸ் நறுக்கியது
  • 2 டே.ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
  • 1 டீ.ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டே.ஸ்பூன் கோதுமை மாவு
  • ரஸ்க்தூள்
  • 1 டே.ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1 டீ.ஸ்பூன் பப்ரிக்கா
  • தேவையான அளவு உப்பு

Notes

செய்முறை
  1. நறுக்கி வைத்த காய்கறிகளை மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளவும்.
  2. அரைத்த பேஸ்டினை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் சிறிதளவு ரஸ்க் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  4. கார்ன் ஃப்ளவர் மாவில் தண்ணீர் சேர்த்து சேர்த்து பேஸ்ட் போல் கரைத்துக்கொள்ளவும்.
  5. வெஜிடபிள் மிக்சினை தேவையான வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
  6. கான்பிளவர் பேஸ்டில் முக்கி எடுக்கவும்.
  7. ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.
  8. விருப்பப்பட்டால் அரை மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
  9. கடாயில் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.