Go Back

குழந்தைகளுக்கான கருப்பு உளுந்து களி

ஆறு மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான 0உணவு வகைகள் என்னென்ன தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் தா2ய்மார்களுக்கான மற்றுமொருட்ரீட் தான் இந்த கருப்பு உளுந்து களி.

Ingredients

  • 4 டே.ஸ்பூன் கருப்பு உளுந்து
  • 2 டே.ஸ்பூன் அரிசி
  • 2 டீ.ஸ்பூன் வெந்தயம்

Notes

  1. கருப்பு உளுந்தினை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
  2. அரிசியினை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
  3. வெந்தயத்தினை வறுக்கவும்.
  4. மூன்றையும் ஆறவிடவும்.
  5. மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
  6. நைஸாக அரைக்கவும்.
  7. தேவைப்பட்டால் சலித்துக் கொள்ளவும்.
  8. இந்த பவுடரை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து 2 முதல் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
கருப்பு உளுந்து அரிசி கஞ்சி செய்வது எப்படி ?
  1. ஒரு பவுலில் 2 டேபிள்ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
  3. மிதமான தீயில் அடுப்பில் வைத்து களி பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறவும்.
  4. குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.