Go Back

ஜவ்வரிசி பேரிச்சம்பழம் கஞ்சி

குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சியினை சீராக்கும் இயற்கையான இனிப்புசுவை நிறைந்த கஞ்சி.

Ingredients

  • 2 ஜவ்வரிசி
  • 2 அல்லது 3   பேரிச்சை
  • இம்மியளவு ஏலக்காய்த்தூள்

Notes

  1. ஜவ்வரிசியை நன்கு கழுவி தண்ணீரில்  5 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
  2. மற்றொரு பவுலில் பேரிச்சபழத்தினை கொட்டைகளை நீக்கி  தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3. பேரிச்சம்பழம் ஊறியவுடன் மிக்சி ஜாரில்  ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
  4. பானில் அரைத்த பேரிச்சம் பேஸ்ட்,ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து அரை டம்ளர்  தண்ணீரையும் சேர்க்கவும்.
  5. 7 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் ஜவ்வரிசி நன்றாக வேகும்  வரை சூடாக்கவும்.
  6. ஜவ்வரிசி பானில் அடி பிடிக்காத அளவிற்கு  கிளறிக் கொண்டே இருக்கவும்.
  7. அடுப்பினை அணைத்தபின்  ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
  8. குழந்தைகளுக்கு இதமாக  பரிமாறவும்.