Go Back

குழந்தைகளுக்கான ஜவ்வரிசி உளுந்து கஞ்சி பொடி

பொதுவாக குழந்தைகளுக்குமுதல் கட்டமாக உணவு கொடுக்கும் பொழுது செரிமானம் ஆவதில் சிறிது  சிரமம் இருக்கும்.அதற்கான சரியான தீர்வு தான் இந்தஜவ்வரிசி உளுந்தம் பருப்பு கஞ்சி.

Ingredients

  • 1/2 கப் ஜவ்வரிசி
  • 1/2 கப் உளுத்தம்பருப்பு

Notes

  1. உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  2. ஜவ்வரிசியை வெடிக்குமளவிற்கு லேசாக வறுக்கவும்.
  3. நன்றாக ஆறவிடவும்.
  4. நைசாக அரைக்கவும்.
  5. நன்றாக சலித்து எடுக்கவும்.
  6. காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
ஜவ்வரிசி உளுந்து கஞ்சி செய்வது எப்படி?
  • வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
  •  ஒரு கப் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
  • கெட்டியாகும் வரை சூடாக்கவும்.
  •  குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.