Go Back

குழந்தைகளுக்கான அத்திப்பழம் ஜாம்

குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஒரு சூப்பரான ஜாம்ரெசிபி தான் இந்த அத்தி பழம் ஜாம்

Ingredients

  • 10 உலர் அத்திப்பழம்
  • கால்கப் வெல்லத் தூள்
  • தண்ணீர்
  • கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு

Notes

  1. உலர் பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அத்திப்பழம் மற்றும் வெல்லத்தூளினை குக்கரில் எடுத்து கொள்ளவும்.
  3. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. குக்கரில் ஒரு விசில் வருமளவிற்கு வேக வைக்கவும்.
  5. சில நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து மிதமான தீயில் வைத்து ஜாம் பதத்திற்கு வருமளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
  6. பின்பு அத்திப்பழங்களை நன்றாக மசிக்கவும்.
  7. சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.