Go Back

குழந்தைகளுக்கான வரகு அரிசி பொங்கல்

இட்லி,தோசை மற்றும் சப்பாத்தியைதவிர்த்து வேறு ஏதேனும் புதுவிதமாகஉணவு சமைக்க வேண்டும் என்று எண்ணினால் இந்த வரகு பொங்கலைகட்டாயம் செய்து பாருங்கள்.

Ingredients

  • 1 கப் வரகு அரிசி
  • 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு
  • 1 டீ.ஸ்பூன் மிளகு
  • 1 டீ.ஸ்பூன்  சீரகத்தூள்
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • இம்மியளவு மஞ்சள்தூள்
  • தேவையானளவு தண்ணீர்
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி (நறுக்கியது)-
  • 1 டேபிள்ஸ்பூன் நெய்
  • 5 முந்திரிப்பருப்பு

Notes

செய்முறை
  1. வரகு அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
  3.  கருவேப்பிலை சேர்க்கவும்.
  4.  இஞ்சி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  5.  பாசிப்பருப்பை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
  6.  வரகு அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்
  7.  தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  8. குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் அளவிற்கு மிதமான தீயில் சூடாக்கவும்
  9.  பானில் சிறிதளவு நெய் ஊற்றவும்.
  10.  முந்திரிப் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
  11. வறுத்த முந்திரிப்பை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பொங்கலில் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
  12. குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்