குழந்தைகளுக்கான நோ சுகர் ஆப்பிள் பட்டர்
மூன்றேமூன்று பொருட்கள் இருந்தால் போதும் நம் குழந்தைகளுக்கு எளிதாகஇந்த ஆப்பிள் பட்டரினை செய்துகொடுக்கலாம்.
- 4 ஆப்பிள்
- 1 டீ.ஸ்பூன் பட்டை தூள்
- இம்மியளவு ஜாதிக்காய்
- ஆப்பிளை நன்றாகக் கழுவி தோலை சீவி நடுவில் உள்ள விதை பகுதியை நீக்கவும்.
- பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- கடாயினை சூடாக்கவும்.
- நறுக்கிய ஆப்பிள்,பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் சேர்க்கவும்
- சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்,
- மிதமான தீயில் கடாயை மூடி 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஆப்பிளில் உள்ள தண்ணீர் வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
- மூடியைத் திறந்து மிதமான தீயில் மீண்டும் 20 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
- வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆப்பிள் பட்டர் ரெடி.