குழந்தைகளுக்கான 3 வகையான சுரைக்காய் ரெசிபிகள்
பொதுவாக சுரைக்காயில் 96% நீர் சத்து அதிகம் உள்ளதால் இது குழந்தைகளுக்கு கோடை காலத்தில் கொடுப்பதற்கு ஏற்ற காய்கறியாகும்.
குழந்தைகளுக்கான சுரைக்காய் அல்வா
தேவையானவை
- சுரைக்காய் துருவியது -1 கப்
- கோக்கனட் சுகர் -கால் கப்
- டிரை ஃப்ரூட் பவுடர்- 1 டே.ஸ்பூன்
- நெய்- 1 டே.ஸ்பூன்
- ஏலக்காய்தூள்- இம்மியளவு
- பால் -முக்கால் கப்
செய்முறை
- கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- சுரைக்காயை அதில் போடவும்.
- 8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
- பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடாகவும்.
- டிரை ஃப்ரூட் பவுடர், கோக்கனட் சுகர் ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
- அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- குழந்தைகளுக்கான சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.
வேகவைத்து மசித்த சுரைக்காய் (அல்லது) சுரைக்காய் கூட்டு
தேவையானவை:
- சுரைக்காய் - பாதியளவு
- பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் - சிறிதளவு
செய்முறை
1.சுரைக்காயை நன்றாக கழுவி தோலை சீவிக்கொள்ளவும். 2.இதனை சிறு சிறு துண்டுகளாக்கி பிரஷர் குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 3.மிதமான தீயில் 2 விசில் வரை வேகவிட்டு ஆறிய பிறகு அதனை மசித்துக் கொள்ளுங்கள். 4.இத்துடன் சீரகத்தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.