Go Back

குழந்தைகளுக்கான ராகி கஞ்சி

ராகி கஞ்சிஎன்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின்உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை.

Ingredients

  • ·       ராகி-கால் கப்
  • ·       தண்ணீர்2 கப்
  • ·       சீரகத்தூள்-இம்மியளவு
  • ·       மிளகுத்தூள்-இம்மியளவு
  • ·       பெருங்காயதூள்-இம்மியளவு
  • ·       வெங்காயம்-1/2 நன்கு நறுக்கியது (தேவைப்பட்டால்)
  • ·       உப்பு- தேவையான அளவு

Notes

  1. ஒரு பானில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  2. 5 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும். பின்பு ஆற விடவும்.
  3. மிளகுத்தூள், சீரகத்தூள் பெருங்காயத்தூள்,நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  4. குழந்தைகளுக்கு நறுக்கிய வெங்காயம் பச்சையாக சேர்ப்பது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் நன்கு வதக்கி அதனுடன் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு பரிமாறவும்.
  5. ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்டால் மோர் கலந்து கொடுக்கலாம்.
  6. குழந்தைகளுக்கு இன்னும் ஆரோக்கியமாக கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை வதக்கி இதனுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.