Go Back

ராகி ரவா உப்புமா

குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி தோசை தவிர்த்து ஆரோக்கியமாக வேறுஎன்ன சிற்றுண்டி கொடுக்கலாம் என்றும் யோசிக்கும் அம்மாவாக நீங்கள் இருந்தால் இந்த ராகிரவா உப்புமா சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக அமையும்.

Ingredients

  • ·       ராகிபவுடர்- ஒரு கப்
  • ·       ரவை-அரை கப்
  • ·       வெங்காயம்-1 (நறுக்கியது)
  • ·       தக்காளி-1 (நறுக்கியது)
  • ·       பீன்ஸ்-நறுக்கியது (விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
  • ·       கடுகு-அரை டீ.ஸ்பூன்
  • ·       எண்ணெய்-1 டீ.ஸ்பூன்
  • ·       கேரட்-1 (நறுக்கியது) 
  • ·       மிளகாய்-1(பொடியாக நறுக்கியது)

Notes

 
  1. பானில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  2. அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
  3. பின்பு தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. அதன் பின் நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  5. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.அதன்பின் ரவை மற்றும் ராகி பவுடர் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
  6. ராகி மற்றும் ரவா நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  7. ரவை வெந்ததும் அடுப்பை அணைத்து மிதமான தீயில் வைத்து பரிமாறவும்.
  8. குறிப்பு:8 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் பொழுது மிளகாய் மற்றும் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.