Go Back

உருளைக்கிழங்கு ஆம்லெட்

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, பான்கேக் மற்றும் முட்டை என்றாலே அலாதி பிரியம் தான். இவற்றை எல்லாம் சேர்த்து ஒரே ரெசிபியில் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காமலா போகும்.
Course Breakfast
Cuisine Indian

Ingredients

  • உருளைக்கிழங்கு-2 பொடியாக நறுக்கியது
  • முட்டைமஞ்சள்கரு
  • வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது)
  • உப்பு-தேவையான அளவு( ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு மட்டும் )
  • அரிசிமாவு -1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள்-1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள்-1 டீஸ்பூன்
  • பெருங்காயம்-இம்மியளவு
  • கரம்மசாலா- ஒரு டீஸ்பூன்
  • எண்ணைஅல்லது நெய்

Notes

  1. உருளைக்கிழங்கை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும்.
  3. ஒரு பவுலில் உருளைக்கிழங்கு. மஞ்சள்கரு மற்றும் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. தோசை கல்லினை சூடாக்கி மிதமான தீயில் வைக்கவும்.
  5. தயாரித்த கலவையினை தோசை மாவு கரண்டியை கொண்டு ஊற்றவும்
  6. நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும்
  7. சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி
  8. குழந்தைகளுக்கு பிடித்தமான சட்னியை கொண்டு பரிமாறவும்.