Go Back

பீட்ரூட் கேரட் அல்வா

குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பல ரெசிபிகளை கடந்து விட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி.

Ingredients

  • ·       பீட்ரூட்-1 (தோல் நீக்கியது சிறியது )
  • ·       கேரட்-2 (தோல் நீக்கியது சிறியது)
  • ·       டேட்ஸ்பவுடர் -4 டேபிள் ஸ்பூன் (8 மாத குழந்தைகளுக்கு )
  • ·       வெல்லம்   - 1 கப்
  • ·       நெய்- 4 டேபிள் ஸ்பூன்
  • ·       ஏலக்காய்தூள் -இம்மியளவு  
  • ·       பொடியாகநறுக்கிய பாதாம் ,முந்திரி மற்றும் பிஸ்தா -2 டேபிள் ஸ்பூன்
  • ·       தண்ணீர்-தேவையான அளவு

Notes

செய்முறை
  1. பானை சூடாக்கி அதில் நெய் ஊற்றி துருவிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு மிருதுவாகும் வரை வதக்கவும்.
  2. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. கேரட் மற்றும் பீட்ரூட் நன்கு வேகும் வரை கிளறவும் .
  4. அதனுடன் பாதாம் பவுடர் வெல்லத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  5. கலவையினை அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
  6. பொடியாக நறுக்கிய நட்ஸினை மேலே தூவி பரிமாறவும்.