Go Back

கேரட் வால்நட் மில்க் ஷேக்

சுவை நிறைந்தஇந்த மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு காலை உணவாக தரலாம்.
தற்பொழுது கோடை காலமாகஇருப்பதால் குழந்தைகளுக்கு இதனை மதிய நேரத்தில் சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம்.

Ingredients

  • கேரட்(தோல் நீக்கி சீவியது)-1
  • வால்நட்- கால் கப்
  • பால்-1 கப்
  • பேரிச்சை-2
  • ஏலக்காய் தூள்-இம்மியளவு

Notes

செய்முறை
  1. கொட்டை நீக்கிய பேரிச்சை மற்றும் வால்நட் இவை இரண்டையும் அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் துருவிய கேரட், வால்நட், பேரிச்சை மற்றும் ஏலக்காய் தூள் இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
  3. ஒன்றாக அரைத்து பின்பு தேவையான அளவு பால் சேர்த்து பின்பு மீண்டும் நைசாக அரைக்கவும்.
  4. மில்க் ஷேக்கினை டம்ளரில் ஊற்றி அதன் மேல் நட்சினை தூவவும்.