Go Back

ஜவ்வரிசி வடை

ஜவ்வரிசியில்ஏராளமான நன்மைகள் இருப்பதால் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டியாக இது இருக்கும்.

Ingredients

  • ஜவ்வரிசி- ஒருகப்
  • வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
  • ரவை -கால் கப்
  • தயிர் -3 டீ.ஸ்பூன்
  • கரம் மசாலா-1 டீ.ஸ்பூன்
  • சீரகம் -1 டீ.ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு
  • இஞ்சி- 1/2 டீ.ஸ்பூன் (துருவியது)
  • பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது )
  • கொத்தமல்லிஇலைகள் மற்றும் கருவேப்பில்லை

Notes

செய்முறை
  1. ஜவ்வரிசியினை தயிரில் நாலு முதல் 5 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் மெதுவாகும் வரை ஊற வைக்கவும்.
  2. ஒரு பவுலில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து மாவு பதத்திற்கு வருமாறு பிசையவும்.
  3. சிறு உருண்டையாக பிசைந்து வடை போன்று தட்டவும்.
  4. ஒரு பானில் எண்ணெயை எடுத்துக்கொண்டு வடையினை பொன்னிறமாகும் வரை பொறுத்து எடுக்கவும்.
  5. ஒரு பேப்பரில் எண்ணெய் போகும் வரை வைக்கவும்.
  6. குழந்தைகளுக்கு பரிமாறவும்.