Go Back

கோடைக்கேற்ற ராகி மோர்

ராகியின்  நற்குணங்களும், மோரின் குளிர்ச்சியும் சேர்ந்த ஒருஅற்புதமான ரெசிபி தான் இந்த ராகி மோர்.

Ingredients

  • ராகி மாவு- அரை கப்
  • மோர்- இரண்டு கப்
  • கடுகு -அரை டீ.ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு -அரை டீ. ஸ்பூன்
  • கடலைப்பருப்பு- அரை டீ.ஸ்பூன்
  • எண்ணெய் -தேவையான அளவு

Notes

செய்முறை
  1. ஒரு பானில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  2.  சட்டியை அடுப்பில் வைத்து கலவை கெட்டி ஆகும் வரை கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
  3.  ஒரு ஜாரில் கிளறிய ராகி மற்றும் மோர் சேர்த்து நன்றாக ஒரு அடி அடிக்கவும்.
  4. பானில் எண்ணெயை சுட வைத்து அதில் கடுகு சேர்க்கவும்.
  5.  கடுகு வெடித்ததும் அதன் பின் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  6.  தயாரித்து வைத்த மோரினை அதில் ஊற்றி பரிமாறவும்.