Go Back

கலர்ஃபுல் வெஜிடபிள் இட்லி

வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த இட்லி மாவு டியாக இருந்தால் போதும் இதை ஒரே 10நிமிடத்தில் எளிதாக செய்து முடித்துக் கொள்ளலாம்.

Ingredients

  • இட்லிமாவு- 4 கப்
  • நறுக்கியவெங்காயம்- 1 கப்
  • குடைமிளகாய்-ஒன்றரை டே.ஸ்பூன்
  • நெய்-தேவையான அளவு
  • கடுகு-ஒரு சிட்டிகை
  • துருவியகேரட்- 2 டே.ஸ்பூன்
  • மஞ்சள்குடைமிளகாய்- ஒன்றரை டே.ஸ்பூன் 
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்-தேவையான அளவு

Notes

செய்முறை
  1. உளுந்து மற்றும் அரிசியை அரைத்து புளிக்க வைத்து இட்லி மாவை ரெடியாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில், நெய் ஊற்றி சூடானதும் கடுகை சேர்த்து தாளிக்கவும்.
  3. தயார் செய்து வைத்திருந்த அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும்.
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
  5. காய்கறிகளை பாதி அளவு வதக்கினால் போதும். இட்லியுடன் சேர்த்து நாம் வேகவைப்பதால், நன்கு வதக்க தேவையில்லை.
  6. வதக்கிய காய்கறிகளை ஆற வைத்து இட்லி மாவுடன் கலக்கவும்.
  7. எப்பொழுது போல் இட்லி சட்டியில் ஊற்றி இட்லிகளை வேக வைக்கலாம்.