Go Back

கேரட் நட்ஸ் சாதம்

குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் மற்றும் நட்ஸ்களின் கலவை சேர்ந்த இந்த கேரட் நட்ஸ் சாதம்.

Ingredients

  • அரிசி-1 கப்
  • தண்ணீர்-2 கப்
  • துருவியகேரட் -அரை கப்
  • டிரை ஃப்ரூட் பவுடர்- 2டேபிள் ஸ்பூன்
  • பால்-1 கப்
  • நெய்-1டேபிள் ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு

Notes

செய்முறை
  1. அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி துருவிய கேரட் சேர்த்து லேசாக வதக்கவும்.
  3. அதற்கு பின்பு அரிசியை சேர்த்து லேசாக ஒரு கிளறு கிளறவும்.
  4. அதற்கு பின்பு பால் மற்றும் ட்ரே ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்க்கவும
  5. ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் விருப்பப்பட்டால் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்
  6. இரண்டு கப் தண்ணீர் சேர்ந்து ஒரு கிளறு கிளறி குக்கரை மூடவும்.
  7. மூன்று விசில் விடவும்.
  8. சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து நன்றாக சாதத்தை கிளறி குழந்தைகளுக்கு மசித்து கொடுக்கலாம்.