Go Back

ஆரோக்கியமான கோதுமை களி

கோதுமையில்குழந்தைகளுக்கு தேவையான தயாமின், கால்சியம், வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள்நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு நல்லஎனர்ஜியை தரும் உணவு பொருளாகும்.

Ingredients

  • கோதுமைமாவு -அரை டேபிள்ஸ்பூன்
  • சுக்குபவுடர்- கால் டீஸ்பூன்
  • நெய்-1-2 டேபிள் ஸ்பூன்
  • நாட்டுசக்கரை (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
  • ட்ரைடேட்ஸ் பவுடர்- எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு
  • தண்ணீர்அல்லது பால்- எட்டு மாதத்திற்குமேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்

Notes

செய்முறை
 
ஒரு கடாயை சூடாக்கி அதில் நெய்யை ஊற்றவும்.
கோதுமை மாவை அதில் போட்டு லேசாக நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
தண்ணீரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
இரண்டு முதல் நான்கு நிமிடங்களுக்கு பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கடைசியாக பால் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நன்கு கிளறவும்.
அல்வா போன்ற பதத்திற்கு வந்ததும் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.