Go Back

சுவையான ஆரோக்கியமான தயிர் சாண்ட்விச்

வழக்கமான சாண்ட்விச்சினை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்துப்பாருங்கள். தயிருடன் கேரட், வெள்ளரிக்காய், மிளகுத்தூள் சேர்த்துள்ளதால் குழந்தைகளின்உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

Ingredients

  • பிரட் துண்டுகள்-2
  • தயிர்- அரைகப்
  • துருவிய கேரட்-கால் கப்
  • பொடியாக நறுக்கியவெள்ளரிக்காய் -கால் கப்
  • பொடியாக நறுக்கியவெங்காயம்- 2 டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லிஇலைகள்- 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு மற்றும்மிளகுத்தூள்- சுவைக்கு ஏற்ப
  • எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்

Notes

செய்முறை
  1. ஒரு பவுலில் கெட்டியான தயிர், துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு பிசையவும்.
  2. லெமன் ஜூஸ் அதற்கு மேல் ஊற்றவும்.
  3. உப்பு மற்றும் மிளகுத்தூளை சுவைக்கு ஏற்ப மேலே தூவவும்.
  4. பிரட் துண்டுகளை எடுத்து அதற்கு மேல் தயார் செய்து வைத்த தயிர் கலவையை தடவி அதற்கு மேல் இன்னொரு பிரட் துண்டை வைக்கவும்.
  5. சாண்ட்விச் இதமாக வேண்டும் என்று நினைத்தால் லேசாக கடாயில் பட்டர் ஊற்றி சூடேற்றி சாப்பிடலாம்.
  6. பிரட் தூண்டினை நீங்கள் விருப்பப்பட்டவாறு பாதியாக கட் செய்து சாண்ட்விச்னை சுவைத்து மகிழலாம்.