Go Back

ஸ்ட்ராபெரி சியா ஜாம்

Ingredients

  • ஸ்ட்ராபெரி பழங்கள்-2
  • நாட்டுசக்கரை- ½ கப்
  • சியா விதைகள்- 2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணிலா எசன்ஸ் -½ டீ.ஸ்பூன் தேவைப்பட்டால்
  • லெமன் ஜூஸ்- சிறிதளவு

Notes

செய்முறை
  1. ஸ்ட்ராபெரி பழத்தினை நன்றாக கழுவி அதன் முள் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்து பழத்தினை இரண்டு முதல் நான்கு துண்டுகளாக வெட்டவும்.
  2. மிதமான தீயில் அகலமான பாத்திரத்தில் ஸ்ட்ராபெரி பழத்தினை அதன் சார் இறங்கும் வரை மெதுவாக கிளறவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கரண்டியால் நன்கு மசித்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. நாட்டுசர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்றவாறு பாத்திரத்தில் சேர்க்கவும்.
  4. சியா விதைகளை அதில் போட்டு லேசாக கிளறவும். சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி கெட்டியாக மாறி கலவையானது ஜாம் பதத்திற்கு வரும்.
  5. அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ஜாம் பாத்திரத்தில் ஒட்டாதபடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  6. அடுப்பில் இருந்து பாத்திரத்தை அகற்றி வெண்ணிலா எசன்ஸ் மற்றும் லெமன் ஜூஸ் சிறிதளவு சேர்க்கவும். அசல் ஜாம் போலவே வரவேண்டும் என்றால் இவற்றை சேர்க்கலாம்.
  7. ஜாமினை ஒரு பாட்டிலில் அடைத்து ஆற வைக்கவும். ஆறியதும் கெட்டியாக மாறும். ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரங்கள் வரை இதனை பயன்படுத்தலாம்.