Go Back

ஹெல்தியான கீரை பூரி

இட்லி,தோசைக்கு நோ சொல்லும் குழந்தைகள் நம்மிடம் விரும்பி வாங்கி சாப்பிடும் உணவு வகை உண்டு என்றால் அது பூரி தான்.

Ingredients

  • கோதுமை மாவு -இரண்டு கப்
  • பாலக்கீரை -ஒரு கப்
  • கொத்தமல்லி தலைகள்- இரண்டு டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய்-1-2 சுவைக்கு ஏற்றவாறு
  • சீரகம் -ஒரு டீஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • தண்ணீர்- மாவு பிசைய தேவையான அளவு
  • ரீஃபைண்ட் ஆயில்- தேவையான அளவு

Notes

செய்முறை
கீரை மற்றும் கொத்தமல்லி தளைகளை நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் அவை இரண்டையும் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் சரியான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பெரிய பவுலில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, சீரகம் மற்றும் அரைத்து வைத்த கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
15 முதல் 20 நிமிடங்களுக்கு மாவினை வைத்து பின்பு எப்பொழுதும் பூரிக்கு உருட்டுவது போன்று உருட்டி தேய்த்து எண்ணெயில் பொறுத்து எடுக்கவும்.
 
குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை பூரி ரெடி.