Go Back

ஆரோக்கியமான ஹாட் சாக்லேட் மில்க்

கடைகளில் இருப்பது போல சுவையான சாக்லேட் மில்கினை ஆரோக்கியமாக வீட்டிலே செய்தால் எப்படி இருக்கும்.

Ingredients

  • பேரிச்சை-7-8
  • பால்- இரண்டரை கப்
  • முளைகட்டிய ராகி மாவு பவுடர் -ஒரு டீஸ்பூன்
  • கோக்கோ பவுடர் -இரண்டு டீஸ்பூன்
  • நறுக்கிய டார்க் சாக்லேட் கோக்கோ 80 சதவீதத்துக்கு மேல்- இரண்டு டேபிள் ஸ்பூன்

Notes

  1. பேரிச்சம் பழத்தை அரை கப் பாலில் பத்து நிமிடம் ஊறவைத்து பேஸ்ட் போன்று நைசாக அரைக்கவும்.
  2. பானில் ஒரு டீஸ்பூன் முளைகட்டி ராகி பவுடர், இரண்டு கப் பால் மற்றும் டீஸ்பூன் கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்கி அடுப்பை ஆன் செய்யவும்
  3. அடிப்படை சிம்மில் வைத்து ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு கலவையை இடைவிடாமல் கிளறவும். ராகி மாவு அடி பிடித்துக் கொள்ளும் என்பதால் இடைவிடாமல் கிளற வேண்டும்.
  4. இதனுடன் அரைத்து வைத்த பேரிச்சம்பழம், இரண்டு டேபிள் ஸ்பூன் நறுக்கி வைத்த டார்க் சாக்லேட் சேர்த்து சாக்லேட் உருகும் அளவிற்கு ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
  5. குழந்தைகளுக்கான சுவையான ஹாட் சாக்லேட் மில்க் ரெடி.