Go Back

இஞ்சி பால்

நம் குழந்தைகளுக்கு நோய் வந்தவுடன் பாதுகாப்பதை விட நோய் வரும் முன்பாகவே 'வருமுன் காப்போம்' என்ற பழமொழிக்கு ஏற்ப அவ்வப்போது இயற்கையான ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்தால் கவலைப்பட தேவையில்லை.
Course Drinks
Cuisine Indian

Ingredients

  • பால்- 1 கப்
  • துருவிய இஞ்சி- 1 டேபிள் ஸ்பூன்
  • தேன்- 2 டேபிள் ஸ்பூன்

Notes

செய்முறை

1.இஞ்சியின் தோலை நீக்கி நைசாக துருவி அல்லது சீவி வைக்கவும். எவ்வளவு பால் உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
2.பாலை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து சீவி வைத்த இஞ்சியை சேர்க்கவும்.
3.இஞ்சியின் சாறு பாலில் இறங்கும் அளவிற்கு மிதமான சூட்டில் சூடு படுத்திக் கொண்டே இருக்கவும்.
4.பால் நன்றாக சூடானதும் தேனை சேர்க்கவும்.
5.இஞ்சி பாலினை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கும்.
6.இஞ்சி போலவே பூண்டு சேர்த்து பூண்டு பால் குழந்தைகளுக்கு கொடுத்தால் அதுவும் நல்ல பலன் அளிக்கும்.