Go Back

முளைகட்டிய சத்துமாவு பீட்ரூட் சப்பாத்தி

சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவுடன், சத்தான காய்கறியான பீட்ரூட்டின் நற்குணங்களும் சேரும் பொழுது குழந்தைகளுக்கான முக்கியமான காலை உணவாக இது இருக்கும்.
Course Breakfast
Cuisine Indian

Ingredients

  • முளைக்கட்டிய சத்துமாவு பீட்ரூட் ட்ரின்க் மிக்ஸர் - 1 கப்
  • கோதுமை மாவு - 1 கப்
  • சமையல் எண்ணெய்- தேவையான அளவு
  • துருவிய பன்னீர்- 100 கிராம்
  • நறுக்கிய பச்சை மிளகாய்- 1
  • நறுக்கிய வெங்காயம்- 1
  • நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
  • உப்பு - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா- 1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • வெள்ளை எல் - மேலே தூவ

Notes

செய்முறை
ஒரு பவுலில் பீட்ரூட் சத்து மாவு மிக்ஸ் மற்றும் கோதுமை மாவு சேர்த்து கலக்கவும்.
தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
சப்பாத்தி மாவிற்கு செய்வது போன்று சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
துருவிய பன்னீர், பச்சை மிளகாய், வெங்காயம். இஞ்சி. உப்பு ,கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் ஓமம் சேர்த்து கலக்கவும்.
உருட்டி வைத்த உருண்டையை சப்பாத்தி போல் தேய்த்து அதில் கலவையை வைத்து நன்கு தேய்க்கவும்.
தோசை சட்டியில் சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.
குழந்தைகளுக்கான சத்தான முளைகட்டிய பீட்ரூட் சப்பாத்தி ரெடி.