Go Back

குழந்தைகளுக்கான கொண்டைக்கடலை சாதம்

குழந்தைகளுக்குபுரோட்டீனை அள்ளித் தரும் ஒரு சுவையான மதிய உணவுதான் இந்த கொண்டைக்கடலை சாதம்.

Notes

  • கொண்டைக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
  • அரிசி 2 டேபிள்ஸ்பூன்
  • நறுக்கிய பூண்டு ஒரு பல்
  • சீரகத்தூள் கால் டீஸ்பூன்
  • மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் இம்மியளவு
  • நெய் 2 டீஸ்பூன்
செய்முறை
  1. கொண்டைக்கடலையை நன்றாக அலசி 2 முதல் 3 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
  2. அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  3. குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
  4. அதில் நறுக்கி வைத்த பூண்டினை போட்டு வதக்கவும்.
  5. அதனுடன் சீரகத்தூள்,மிளகுத்தூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  6. ஒரு கிளறு கிளறவும்.
  7. கொண்டைக்கடலை மற்றும் அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
  8. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  9. குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  10. நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.