Go Back

குழந்தைகளுக்கான ஹாட் சாக்லேட் மில்க்

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான,சுவையான சாக்லேட் மில்க் ஷேக்.சாக்லேட் மில்க்கில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்,புரோட்டீன், வைட்டமின் ஏ,வைட்டமின் சி மற்றும் அயன் போன்றவை  நிறைந்துள்ளன.

Ingredients

  • 2 கப் பால்
  • 3 டீ.ஸ்பூன் கோகோ பவுடர்
  • 3 டீ.ஸ்பூன் வெல்லம்
  • இம்மியளவு இலவங்கப்பட்டை தூள்

Notes

  1. ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், வெல்லம் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. சிறிது பால் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு  கிளறவும்.
  3. மீதமுள்ள பாலையும்  சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. மிதமான தீயில் பால் நுரை வரும் வரை கொதிக்க வைக்கவும்.
  5. சிறிது நேரம் கிளறவும்.
  6.  சூடான சாக்லேட் மில்க் ரெடி.