Go Back

குழந்தைகளுக்கான நோ சுகர் ஆப்பிள் பட்டர்

மூன்றேமூன்று பொருட்கள் இருந்தால் போதும் நம் குழந்தைகளுக்கு எளிதாகஇந்த ஆப்பிள் பட்டரினை  செய்துகொடுக்கலாம்.

Ingredients

  • 4 ஆப்பிள்
  • 1 டீ.ஸ்பூன் பட்டை தூள்
  • இம்மியளவு ஜாதிக்காய்

Notes

  1. ஆப்பிளை நன்றாகக் கழுவி தோலை சீவி நடுவில் உள்ள விதை பகுதியை நீக்கவும்.
  2.  பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3.  கடாயினை சூடாக்கவும்.   
  4.  நறுக்கிய ஆப்பிள்,பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் சேர்க்கவும்
  5.  சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்,
  6.  மிதமான தீயில் கடாயை மூடி 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஆப்பிளில் உள்ள தண்ணீர் வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
  7. மூடியைத் திறந்து மிதமான தீயில் மீண்டும் 20 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
  8.  வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  9.  மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  10. குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆப்பிள் பட்டர் ரெடி.