குழந்தைகளுக்கான சீஸ் கோதுமை நூடுல்ஸ்
குழந்தைகளுக்குபிடித்தமான சீஸ் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்தை அளிப்பதுடன் உணவிற்கு மேலும் சுவையைகூட்டுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி,காப்பர்,மெக்னீசியம்,மாங்கனீஸ் போன்ற மினரல்கள் கலந்திருப்பதால் கால்சியம் சத்தினைஅளிக்கவல்லது.
- கப் 1/2 பால்
- 2 பல் பூண்டு நறுக்கியது
- 2 டேபிள்.ஸ்பூன் சீஸ்
- 1 டேபிள்.ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 1 டீ.ஸ்பூன் மிளகு தூள்
- 1 டீ.ஸ்பூன் உப்பு
- 180 கிராம் நூடுல்ஸினை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீரை வடிகட்டி நூடுல்ஸினை ஆறவிடவும்.
- கடாயில் எண்ணெயை ஊற்றவும்.
- நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பால் சேர்க்கவும்
- அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- நூடுல்ஸ் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு,மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறவும்.
- இதமாக பரிமாறவும்.