Go Back

குழந்தைகளுக்கான வெஜிடபிள் ஜவ்வரிசி தோசை

குழந்தைகளுக்குநாம் வழக்கமாக கொடுக்கும் காலைஉணவு என்றால் அது தோசை,இட்லி மற்றும் சப்பாத்தி தான்.அதிலிருந்துசற்றே வித்தியாசமாக என்ன  கொடுக்கலாம் என்றுயோசிக்கும் அம்மாவாக இருந்தால் நீங்கள் இந்த ஜவ்வரிசி தோசையினை முயற்சி செய்யலாம்.
Course Breakfast
Cuisine Indian
Prep Time 30 minutes
Cook Time 5 minutes
Total Time 33 minutes

Ingredients

  • ஜவ்வரிசி-1 கப்
  • ரவை-1/2 கப்
  • அரிசிமாவு -1/2  கப்
  • தயிர்-3/4 கப்
  • உப்பு-தேவையான அளவு
  • கேரட்-1
  • வெங்காயம்-1
  • பச்சைமிளகாய்- 1
  • தண்ணீர்

Instructions

  • 1.ஜவ்வரிசியை4 முதல் 5 மணி நேரம் அல்லதுஒரு நாள் இரவு முழுவதும்தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • 2.ஒரு பவுலில் ஊற வைத்த ஜவ்வரிசி, அரிசி மாவு, ரவை, தயிர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
  • 3.நன்குகலக்கவும்.
  • 4.தேவைப்பட்டால்சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • 5.வெட்டிவைத்த காய்கறிகளை சேர்த்து மாவினை நன்றாக கலக்கவும். தோசை கல்லை சூடாக்கவும்.
  •  6.தோசை கல்லில் மாவினை  ஊற்றவும்
  • 7. சுற்றிலும் சிறிதளவு நெய் விட்டு தோசை பொன்னிறமானதும்  திருப்பி எடுக்கவும்
  • 8.விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்