Go Back

குழந்தைகளுக்கான 3 வகையான சுரைக்காய் ரெசிபிகள்

பொதுவாக சுரைக்காயில் 96% நீர் சத்து அதிகம் உள்ளதால் இது குழந்தைகளுக்கு கோடை காலத்தில் கொடுப்பதற்கு ஏற்ற காய்கறியாகும்.
Course Dessert
Cuisine Indian
Servings 4
Author Dr Hemapriya

Notes

குழந்தைகளுக்கான சுரைக்காய் அல்வா
தேவையானவை
  • சுரைக்காய் துருவியது -1 கப்
  • கோக்கனட் சுகர் -கால் கப்
  • டிரை ஃப்ரூட் பவுடர்- 1 டே.ஸ்பூன்
  • நெய்- 1 டே.ஸ்பூன்
  • ஏலக்காய்தூள்- இம்மியளவு
  • பால் -முக்கால் கப்
செய்முறை
  1. கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
  2. சுரைக்காயை அதில் போடவும்.
  3.  8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
  4.  பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடாகவும்.
  5.  டிரை ஃப்ரூட் பவுடர், கோக்கனட் சுகர் ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
  6. அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
  7.  குழந்தைகளுக்கான சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.
 
வேகவைத்து மசித்த சுரைக்காய் (அல்லது) சுரைக்காய் கூட்டு

தேவையானவை:

  • சுரைக்காய் - பாதியளவு
  • பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகத்தூள் - சிறிதளவு
செய்முறை
1.சுரைக்காயை நன்றாக கழுவி தோலை சீவிக்கொள்ளவும்.          2.இதனை சிறு சிறு துண்டுகளாக்கி பிரஷர் குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.                                                            3.மிதமான தீயில் 2 விசில் வரை வேகவிட்டு ஆறிய பிறகு அதனை மசித்துக் கொள்ளுங்கள்.                                                                                  4.இத்துடன் சீரகத்தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.