கோடைக்கேற்ற நுங்கு பாயாசம்
கோடைகாலம் வந்தால்தான் நுங்கு என்ற வார்த்தை நம் நினைவிற்கு வரும். என்னதான் விதவிதமானகுளிர்பானங்கள் தென்பட்டாலும் நம் பாரம்பரிய பானங்களான இளநீர்,பதநீர்,நுங்கு போன்றவை மக்களின் கவனங்களை தற்பொழுது ஈர்த்து வருகின்றன
- நுங்கு-4
- பால் -2 கப்
- வெல்லத்தூள் - 3 டேபிள்.ஸ்பூன்
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் -2 டீஸ்பூன்
- குங்குமப்பூ -இம்மியளவு
குங்குமப்பூவைபாலில் சேர்த்து மிதமான தீயில் பால் பாதியாக வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
அடுப்பினைஅணைத்து பாலினை ஆறவைக்கவும்.
ஆற வைத்தபாலுடன் வெல்லத்தூள் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
நுங்கின்தோலை நீக்கி பொடியாக நறுக்கியோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ பாலுடன் சேர்க்கவும்.
நன்குகலக்கவும்