Go Back

குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அவல் பாசிப்பருப்பு பவுடர்

குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும்அம்மாக்களின் கவனம் முழுவதும் குழந்தைகளுக்கு சத்துள்ளதாக என்னென்ன உணவு கொடுக்கலாம்என்பதிலேயே இருக்கும்.
Course Breakfast
Cuisine Indian
Author Dr Hemapriya

Ingredients

  • அவல்- 100 கிராம்
  • பாசிப்பருப்பு-30 கிராம்

Notes

செய்முறை
பாசிப்பருப்பை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்..
பின்பு அவலை லேசாக நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும்.
இரண்டையும் மிக்ஸியில் தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
பின்பு ஒன்றாக கலக்கவும்.
 தேவையான இன்ஸ்டன்ட் கஞ்சி பவுடர் ரெடி
இன்ஸ்டன்ட் கஞ்சி தயாரிப்பது எப்படி?
 ஒரு டேபிள் ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்
அதில் நன்கு சூடான தண்ணீரை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்
குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் இனிப்பு சுவைக்காக பழக்கூழ் சேர்த்துக் கொள்ளலாம்
5 நிமிடங்கள் அதனை மூடி வைக்கவும்.
குழந்தைகளுக்கு தேவையான இன்ஸ்டன்ட் கஞ்சி ரெடி.