Go Back

அவல் ஓட்ஸ் இன்ஸ்டன்ட் மிக்ஸ்

Ingredients
  

  • ஓட்ஸ்- அரைகப்
  • அவல்- அரை கப்
  • முந்திரி -4 - 5
  • பாதாம் - 4 - 5
  • ஏலக்காய் 1

Notes

செய்முறை
கடாயில்  ஓட்ஸினை  லேசாக மணம்  வரும் வரை வறுக்கவும்.
அதற்குப்பின் முந்திரி, பாதாம் போன்றவற்றை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.கடிக்கும் பொழுது மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். அந்த பதத்திற்கு வறுக்க வேண்டும்.
அதற்கு பிறகு அவலை சேர்த்து மொரு மொருப்பாகும் வரை வறுக்கவும்.
முந்திரி, பாதாம், அவல்  அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
 இதை வைத்து உணவு தயாரிப்பது எப்படி?
நன்கு புகை வரும் அளவிற்கு கொதிக்க வைத்த தண்ணீரை பயணம் செய்யும்பொழுது உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
இன்ஸ்டன்ட்  மிக்ஸ் பவுடரில்  கொதிக்கும் தண்ணீரை ஊற்றி நன்கு கட்டிகள் இல்லாமல் கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 வீட்டில் தயார் செய்யும் பொழுது தண்ணீரை கொதிக்க வைத்து மூன்று முதல் நான்கு டேபிள் ஸ்பூன் பவுடரை அதனுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 நீங்கள் இன்னும் சத்தாக  கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் குழந்தைகளுக்கு பிடித்த பழத்தினை கூழாக்கி இந்த மிக்ஸுடன் கலந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.