Go Back

அவல் ரவா மினி இட்லி

ஆவியில் வேகவைத்த உணவே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Ingredients

  • தேவையானவை
  • அரிசி அவல்- ஒரு கப்
  • ரவை- ஒரு கப்
  • தயிர்- கால் கப்
  • கொத்தமல்லி இலைகள்- ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • வத்தல் பொடி- ஒரு டீஸ்பூன் இரண்டு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்
  • கடுகு- ஒரு டீஸ்பூன்
  • எள்ளு- ஒரு டீஸ்பூன்
  • பெருங்காயம் -ஒரு சிட்டிகை

Notes

செய்முறை
அரிசி அவுளை நன்றாக கழுவி பாத்திரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
ரவையை தயிருடன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அவுல், ரவை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பத்து நிமிடங்களுக்கு இட்லி குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.
கடாயில் சமையல் எண்ணெய் சேர்த்து கடுகு, எள்ளு, பெருங்காயம் ஒரு சிட்டிகை மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.
என்னுடன் கொத்தமல்லி சட்னி வைத்து சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.