ஆப்பிள் பார்லி கஞ்சி
குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கான எனர்ஜியினை அள்ளித்தரும் உணவுதான் பார்லி.இதை சத்துக்கள் நிறைந்த ஆப்பிளுடன் சேர்ந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக அமையும்.
- ஆப்பிள்-1
- பார்லி- 3 டே.ஸ்பூன்
- நெய்- 1 டீ.ஸ்பூன்.
பார்லியை நன்றாக கழுவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
கடாயினை சூடாக்கி நெய் ஊற்றவும்.
ஊறவைத்த பார்லியினை போட்டு சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
நறுக்கிய ஆப்பிள் சேர்த்து வதக்கவும்.
1 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
குறிப்பு: 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதில் பால் சேர்க்கலாம்.
மிதமான தீயில் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
நன்றாக மசிக்கவும்.