ஆரோக்கியமான அமர்ந்து பாயாசம்
குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை தரும் ஒரு அற்புதமான உணவு தான் ராஜகீரா என்று அழைக்கப்படும் தண்டுக் கீரை விதைகள்.
- தண்டுக்கீரை விதைகள்- ஒரு கப்
- பாதாம்-6
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
- பால்- ஒன்றரை கப்
- நெய்- 1-2
- நாட்டு சக்கரை- 3 டேபிள் ஸ்பூன்
விதைகளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். ரெடிமேட் ஆக வறுத்த விதைகளும் கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கினால் குக்கரில் வேக வைக்க தேவையில்லை.
நாட்டு சக்கரை அளவு வெள்ள உபயோகித்தால் தண்ணீரில் காட்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
பால் கொதித்ததும் விதைகளை அதனுள் போட்டு மிதமான கிளறிக் கொண்டே இருக்கவும். ஐந்து நிமிடங்களில் விதை கெட்டியாக வெந்துவிடும்.
ஏலக்காய் தூள் மற்றும் வெல்லம் சேர்க்கவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
நெயில் வறுத்த பாதாம் பருப்பை சீவி இதனுடன் சேர்க்கவும். ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கான சத்தான பாயாசம் ரெடி.