ஆரோக்கியமான அவல் சப்பாத்தி
வழக்கமாக வீட்டில் செய்யப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி ,பூரி ஆகியவற்றை சாப்பிட்டு போர் அடித்த குழந்தைகளுக்கு சற்று புத்துணர்ச்சி ஊட்ட ஏதேனும் வித்தியாசமான ரெசிபி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவல் சப்பாத்தியை நீங்கள் செய்து கொடுக்கலாம்.
- அவல்- 1 கப்
- கோதுமை மாவு - 1 கப்
- கேரட் சிறியது- 1
- உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது- 1
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள்-. கால் டீஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- நெய் அல்லது பட்டர்
செய்முறை
- அரிசி அவலினை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அவலில் உள்ள தண்ணீரை வடிகட்டி அப்படியே வைக்கவும்.
- பெரிய பவுலில் ஊற வைத்த அவல், கோதுமை மாவு, துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள் ,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். சேர்க்கப்பட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் விடும் என்பதால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- மாவினை சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்திக்கு உருட்டுவது போன்ற உருட்டவும்.
- தோசை கல்லை வைத்து சப்பாத்தி போன்ற தேய்த்து கல்லில் போடவும்.
- பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும். நெய் அல்லது பட்டர் சேர்த்து சப்பாத்தி சுடலாம்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சப்பாத்தி ரெடி.