Go Back

ஆரோக்கியமான கீரை இட்லி

கீரையை தனியாக கொடுப்பதை காட்டிலும் இவ்வாறு இட்லியுடன் சேர்ந்து கொடுப்பதால் சுவையும் வேறுபட்டு இருப்பதால் கட்டாயம் குழந்தைகளுக்கு பிடித்த உணவாக இது இருக்கும்

Ingredients

  • இட்லிமாவு -ஒரு கப்
  • பொடியாகநறுக்கிய கீரை- ஒரு கப்
  • துருவியகேரட்- அரை கப்
  • சீரகம்-அரை டீ.ஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு

Notes

செய்முறை
எப்பொழுதும் போல் அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்து குளிக்க வைத்து இட்லி மாவினை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
கீரையை வேக வைத்துக் கொள்ளவும் அல்லது கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
கீரை கலவையை மாவில் சேர்த்து அதனுடன் துருவிய கேரட் மற்றும் சீரகம் சேர்த்து கலக்கவும்.
பின்பு இட்லி தட்டில் ஊற்றி எப்பொழுதும் இட்லி வேக வைப்பது போன்ற வேக வைத்து எடுக்கவும்.