ஆரோக்கியமான ப்ரோக்கோலி சாதம்
ப்ரோக்கோலி பொறியலாக செய்து கொடுப்பதை விட இப்படி சாதத்துடன் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் சாப்பிட்டது போன்ற உணர்வுடன் ப்ரோக்கோலியை சாப்பிட்டு விடுவார்கள்.
- வேக வைத்த சாதம்- 1 கப்
- ப்ரோக்கோலி இதழ்கள் பொடியாக நறுக்கியது- 1/2 கப்
- நறுக்கிய வெங்காயம்- 2 டே.ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு-1
- மஞ்சள் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய்- 1 டீ.ஸ்பூன்
ப்ரோக்கோலியின் இதழ்களை காலிஃப்ளவரை பிரிப்பது போன்று தனித்தனியாக பிரித்து சுடு தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு போட்டு வைக்கவும். பின்பு பொடிப்பொடியாக நறுக்கவும்.
கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கி வைத்த ப்ரோக்கோலியை அதில் போட்டு மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்திருக்கவும்.
ஏற்கனவே வேக வைத்த சாதத்தை அதில் போட்டு நன்றாக கிளறவும்.
அடுப்பினை அணைத்தபின் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்.