Go Back

ஆரோக்கியமான ராகி அடை

ராகியை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு எப்படி சுவையாக செய்து கொடுப்பது என்பதற்கான ரெசிபி தான் இந்த ராகி அடை.

Ingredients

  • ராகி மாவு- ஒரு கப்
  • கோதுமை மாவு- அரை கப்
  • வேகவைத்த உருளைக்கிழங்கு-2
  • சீரகம்- அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
  • எண்ணெய்-1 1/2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • வெதுவெதுப்பான தண்ணீர்

Instructions

  • கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
  • அதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஒரு ஓரமாக வைக்கவும்.
  • ஒரு பவுலில் ராகி மாவு ,கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
  • தேவைப்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும். 10 நிமிடங்களுக்கு அதனை மூடி வைக்கவும்.
  • மாவினை முக்கோண வடிவத்தில் உருட்டி அதில் வசித்து வைத்த உருளைக்கிழங்கினை வைத்து நன்கு சப்பாத்தி போன்ற உருட்டவும்.