ஆரோக்கியமான வெஜிடபிள் கோதுமை நூடுல்ஸ்
இனி குழந்தைகள் நூடுல்ஸ் கேட்டால் நீங்கள் பயப்படாமல் செய்து கொடுக்கலாம்.
- காலிபிளவர் இதழ்கள்- ஒரு கப்
- நறுக்கிய கேரட்- ஒன்று
- நறுக்கிய தக்காளி-1
- கடலை எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
- மை லிட்டில் மொப்பெட் கோதுமை நூடுல்ஸ்- ஒரு கப் வேகவைத்தது
- மிளகு- அரை டீஸ்பூன்
- வெண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காலிபிளவர் இதழ்கள், கேரட் மற்றும் தக்காளி சேர்க்கவும்.
மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
காய்கறிகளை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும்.
திரும்பவும் கடாயில் சிறிதளவு பட்டர் சேர்த்து அரைத்த காய்கறி மசியலை சேர்த்து கலக்கவும்.
வேகவைத்து எடுத்துக் கொண்ட நூடுல்ஸ் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை மேலே தூவும்.