இதமான வால்நட் பால்
பொதுவாக நட்ஸ் வகைகள் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். எனவே அதையே குழந்தைகளுக்கு மருந்தாகவும் கொடுத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போன்று நமக்கு இருக்கும் அல்லவா. அதற்கான ரெசிபி தான் இந்த வால்நட்பால்.
- தேவையானவை
- மை லிட்டில் மொப்பட் நாட்டுச்சக்கரை- 2 டேபிள் ஸ்பூன் ஒரு வயது குழந்தைகளுக்கு மேல்
- தண்ணீர்- தேவையான அளவு
- நெய்- 2 டேபிள் ஸ்பூன்
- வால்நட்- 2 டேபிள் ஸ்பூன்
- கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள்-1 சிட்டிகை
செய்முறை
முதலில் சக்கரையுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி ஓரமாக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி வால்நட்டினை சேர்த்து வறுத்து பொடி செய்து ஒரு ஓரமாக வைக்கவும்.
அதே கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
ஏற்கனவே தயாரித்த சக்கர பாகினை கோதுமை மாவில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
அதனுடன் வால்நட் பவுடர், தேவையான அளவு தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வால்நட் பால் ரெடி.