ஈஸியான நோ பேக் கேரட் கேக்
இந்த கேக்கைசெய்வதற்கு நீங்கள் பேக் செய்ய தேவை இல்லை. எனவே பேக் செய்யும் பொழுது கேக் நன்றாகவரவில்லை என்று டென்ஷன் உங்களுக்கு தேவையில்லை.
- துருவிய கேரட்-2கப்
- பேரிச்சம்பழம்-1 கப் (சுடு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்ட வேண்டும்)
- ரோல்டு ஓட்ஸ்-1 கப்
- டெசிகேட்டட் கோகனட்- 1 கப்
- வறுத்த பாதாம்-1 கப்
- லவங்கப்பட்டை-2 டீ.ஸ்பூன்
- ஜாதிக்காய்-கால்டீ.ஸ்பூன்
- இஞ்சி- கால்டீ.ஸ்பூன்
- வெண்ணிலா எசன்ஸ்-ஒரு டீ.ஸ்பூன்
- பேரிச்சம்பழம்-3
- முந்திரி பருப்பு-ஒரு கப் (சுடு தண்ணீரில் 10 நிமிஷம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்)
- ஓட்ஸ் மில்க்-1/2 கப்
- வெண்ணிலா எசன்ஸ்-ஒரு டீ.ஸ்பூன்
மேலே தூவுவதற்கு
- நொறுக்கிய வால்நட்
- துருவிய கேரட்
மேலே தடவுவதற்கு
- க்ரீம் சீஸ்- 1 கப்
- பொடியாக்கிய பிரவுன் சுகர்- 1/2 கப்
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீ.ஸ்பூன்
செய்முறை
கேக் செய்வதற்காக மேலே கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்கவும். மிகவும் தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.
கேக் பேக் செய்யும் டின்னில் இந்த கலவையை ஊற்றி நன்கு பரப்பவும். அதற்கு மேல் கிரிமை தடவி அதற்கு மேல் துவ வேண்டியவற்றை தூவ வேண்டும்.
ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்க வேண்டும். சிறு சிறு துண்டுகளாக வெட்டி மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வைத்து உபயோகிக்கலாம்.