எலுமிச்சை புதினா சாதம்
லெமன் சாதம் என்பது நாம் வழக்கமாக வீட்டில் லஞ்ச் பாக்ஸ்க்காக செய்யும் ரெசிபி தான்.ஆனால் அதே சற்று வித்தியாசமாக மற்றும் ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கலாம் என்று யோசித்து ரெசிபி தான் இந்த புதினா லெமன் சாதம்.
- சாதம்- ஒரு பவுல்
- லெமன் ஜூஸ்- ஒரு பழம்
- நல்லெண்ணெய்-3 டேபிள்ஸ்பூன்
- கடுகு- அரை டீஸ்பூன்
- இஞ்சி பொடியாக நறுக்கியது- அரை இன்ச்
- நறுக்கிய மிளகாய்-1
- வத்தல்-1
- முந்திரிப் பருப்பு-10
- பெருங்காயம்- கால் டீஸ்பூன்
- புதினா இலைகள்- ஒரு கைப்பிடி அளவு
- உப்பு-தேவையான அளவு
- கருவேப்பிலை
- செய்முறை
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
நறுக்கி வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், வத்தல், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மனம் வரும் வரை வறுக்கவும்.
சாதத்தை அதனுடன் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அதனுடன் லெமன் ஜூஸ், புதினா, சேர்த்து நன்றாக கிளறவும்.
குழந்தைகளுக்கான சுவையான புதினா லெமன் சாதம் ரெடி.
இதுவரை லெமன் சாதத்தை மட்டுமே சாப்பிட்ட குழந்தைகளுக்கு, புதினாவின் வாசமும் சேரும்பொழுது சாப்பிடுவதற்கு மேலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.