ஓட்ஸ் தேங்காய் லட்டு
ஓட்ஸ் மற்றும் தேங்காய் இரண்டுமே குழந்தைகளுக்கு நன்மை சேர்க்கும் ஒன்று என்பதால் அதை வைத்து ஆரோக்கியமாக லட்டு எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை காணலாம்.
- ரோல்டு ஓட்ஸ்- 1 கப்
- துருவிய தேங்காய்- அரை கப்
- நாட்டு சக்கரை- அரை கப்
- நெய்-2 டே.ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- நட்ஸ் பவுடர்- 2 டே.ஸ்பூன்
ஓட்சினை மிதமான தீயில் லேசாக நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு முதல்
மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கவும்.
அதில் நாட்டு சக்கரையை போட்டு சர்க்கரை உருகும் வரை கிளறவும்.
ஓட்ஸ் பவுடர் ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸ் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுப்பை அணைத்தபின் கலவை அறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.