ஓட்ஸ் நட்ஸ் மிக்சர்
குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் பாதாம், முந்திரி, நிலக்கடலை, உலர் திராட்சை உடன்,ஓட்ஸும் சேர்த்து இந்த ரெசிபி தயாரிக்கப்படுவதால் குழந்தைகள் சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
- ரோல்டு ஓட்ஸ்- 1 கப்
- நறுக்கிய பாதாம்- 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
- நிலக்கடலை-2 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை- 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சக்கரை- 2 டேபிள் ஸ்பூன்
- நெய்- ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஓட்ஸினை மிதமான தீயில் வைத்து லேசாக மொறுமொறுப்பாகும் வரை வறுத்து ஒரு ஓரமாக வைக்கவும்.
அதே கடாயில் நிலக்கடலை, பாதாம் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை லேசாக நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
கடாயில் நெய்யை ஊற்றி அதில் நாட்டு சக்கரையை போட்டு லேசாக உருகும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
அடுப்பை அணைத்து அதில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளை வேகமாக சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக சக்கரை படும் அளவிற்கு கிளறி விடவும்.
நன்றாக ஆறவிட்டு காற்று போகாத டப்பாவில் அடைக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான மொரு மொருப்பான ஸ்னாக்ஸாக இது இருக்கும்.