ஓட்ஸ் பேரிக்காய் கஞ்சி
கொடுக்கும் ஓட்ஸ் மற்றும் பேரிக்காய் இரண்டும் பல வகையான சத்துக்களை கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவாக இது இருக்கும்.
- ஓட்ஸ்-அரை கப்
- பேரிக்காய்-1
- தண்ணீர்-தேவையான அளவு
செய்முறை
ஓட்சினை எண்ணெய் சேர்க்காமல் பானில் வறுத்துக் கொள்ளவும்.
அதில் நறுக்கி வைத்த பேரிக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் பேரிக்காய் மென்மையாக ஆகும் அளவிற்கு வேக விடவும்.
அடுப்பினை ஆஃப் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கான சத்தான பேரிக்காய் ஓட்ஸ் கஞ்சி ரெடி.
குழந்தைகளுக்கு காலை மற்றும் மதிய நேரத்தில் கொடுப்பதற்கு ஏற்ப ஒரு சத்தான உணவாக இந்த ஓட்ஸ் பேரிக்காய் கஞ்சி அமையும்.
இதன் சுவையும் சற்று வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பர்.